×

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் செம்மல் விருது: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, தமிழ்ச் செம்மல் விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 2019ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட, முனைவர் கோ.ப. செல்லம்மாள் (சென்னை மாவட்டம்), முனைவர் மரியதெரசா (திருவள்ளூர் மாவட்டம்), முனைவர் எஸ். ஸ்ரீகுமார் (காஞ்சிபுரம் மாவட்டம்), ச.இலக்குமிபதி (வேலூர்), கவிஞர் அ.க.இராசு (எ) பாளைவேந்தன் (கிருஷ்ணகிரி), கவிஞர் எறும்பூர் கை.செல்வகுமார் (திருவண்ணாமலை), கல்லைக்கவிஞர் வீ.கோவிந்தராசன்(விழுப்புரம்).

முனைவர் எஸ்.எம். கார்த்திகேயன் (கடலூர்), முனைவர் த.மாயகிருட்டிணன் (பெரம்பலூர்), முனைவர் து.சேகர் (அரியலூர்), வ.முத்துமாரய்யன் (சேலம்), கவிஞர் மா.இராமமூர்த்தி (தர்மபுரி), ப.சுப்பண்ணன் (நாமக்கல்), முனைவர் எண்ணம்மங்கலம் அ.பழநிசாமி (ஈரோடு), முனைவர் சு.இளவரசி (கரூர்), கவிஞர் அ.ஞானமணி (கோயம்புத்தூர்), முத்து சுப்ரமணியன் (திருப்பூர்), சபீதா போஜன் (நீலகிரி), அ.அந்தோணி துரைராஜ் (திருச்சி), முனைவர் அ.அ.ஞானசுந்தரத்தரசு (புதுக்கோட்டை).

சொ.பகீரதநாச்சியப்பன் (சிவகங்கை), ஆதி நெடுஞ்செழியன் (தஞ்சாவூர்), இரா.கல்யாணராமன் (திருவாரூர்), சி.சிவசங்கரன் (நாகப்பட்டினம்), மை.அப்துல்சலாம் (இராமநாதபுரம்), முனைவர் பி.சங்கரலிங்கம் (மதுரை), அ.சு.இளங்கோவன் (திண்டுக்கல்), சா.பி.நாகராசன் (எ) தேனி ராஜதாசன் (தேனி), முனைவர் இரா. இளவரசு (விருதுநகர்), க.அழகிரிபாண்டியன் (திருநெல்வேலி), நம்.சீநிவாசன் (தூத்துக்குடி), குமரிஆதவன் (கன்னியாகுமரி), ந.கருணாநிதி (திருப்பத்தூர்), வத்சலா சேதுராமன் (செங்கல்பட்டு), த.தினகரன் (ராணிப்பேட்டை), உமாகல்யாணி (தென்காசி )மற்றும் பெ.அறிவழகன் (கள்ளக்குறிச்சி) ஆகிய 37 விருதாளர்களில், 19 விருதாளர்களுக்கு முதல்வர் நேற்று தமிழ்ச் செம்மல் விருதிற்கான விருதுத் தொகை 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட இதர விருதாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னிலையில் அமைச்சர்களால் தமிழ்ச் செம்மல் விருதுகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்/ உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) கோ. விசயராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai General ,Edappadi , Tamil Semmal Award at the Chennai General Secretariat: Chief Minister Edappadi presented
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை...